Tuesday, November 11, 2008

தலை தீபாவளி

எலோருக்கும்
இன்று தீபாவளி

உன் ஆடைகளுக்கு
மட்டும் தலை தீபாவளி

அது என்ன
தலை தீபாவளி?

இன்று தானே
அவை அணிகின்றன உன்னை
முதன் முதலில்

Monday, August 25, 2008

பேரழகி

உன்னை யார்
பேரழகியாய்
பிறக்க சொன்னது

வெறுமையாகவே
நிரம்புகின்றன
உனக்கான கவிதைத்
தாள்கள்

உவமை தேடலிலேயே
முடிந்து போகின்றன
பொழுதுகள்
ஒவ்வொரு நாளும்

Monday, August 11, 2008

சிரிப்பு தேவதைகள்

உதடு சுழித்து
கன்னத்தில் குழி விழ
சற்றே தலை சாய்த்து
ஓரக் கண்ணால்
இன்னும் இருக்கிறது பட்டியல்

நீ அழகிய தேவதை,
உன் சிரிப்பினுள்
எத்தனை தேவதைகள்

Friday, June 6, 2008

ஜன்னல்கள்

உன் வீட்டில்
நிறைய ஜன்னல்கள்

முன்னறையில்,பக்கவாட்டில்,
படுக்கையறையில்

எல்லாமும்
சாலையை நோக்கியதாக
எனக்கொரு ப்ரமை

ஒவ்வொரு முறையும்
எல்லா ஜன்னல்களுக்குப் பின்னாலும்
பார்துவிடுகிறேன்
உன் கண்களை

Friday, April 11, 2008

உன் பெயர்

என்ன
தோன்றினாலும்

கிறுக்கலாக
எழுதிவிட முடிந்த என்னால்

உன் பெயரை மட்டும்
அழகாகத்தான்

எழுத முடிகிறது

Monday, March 24, 2008

உன் விரல்கள்

எப்பொழுது
தரப்போகிறாய் நீ

பழைய சோற்றுடன்
தொட்டுக்கொள்ள
உன் விரல்களையும்